புதன், 30 டிசம்பர், 2009

என்னைப் பாதித்த சினிமா Forest Gump


நாம் சினிமாக்களில் எத்தனையோ பாத்திரங்களைப் பார்த்திருப்போம். ஆனால் அவற்றில் சில மட்டும் எம் மனதை தைத்து நீண்ட நாட்களுக்கு பதிந்திருக்கும். இளந் தாடியுடன் Interview சென்று அங்கே உணர்ச்சிவசப்பட்டு "What else do u want? two horns?" என ஆத்திரப்படும் ரங்கன்,
அதீத புத்திசாலித்தனத்தையும், தன்னம்பிக்கையையும்,வர்க்க உணர்வையும் அப்பாவித் தனத்திற்குள் மறைத்துக் கொள்ளும் கோபத்தையும் பக்குவமாய் வெளிப்படுத்தும் நல்லசிவம்,
தங்கை மேல் பாசமும் அதற்கு சற்றும் குறையாத ரோசமும் கொண்ட காளி, பூக்களை கூட ஒன்று குறையாமல் எண்ணி வைத்து விட்டு பின் "அன்பு காட்டுவதில்தான் கஞ்சத் தனமே கூடாது" என வசனம் பேசும் வித்யாசாகர் என தமிழ் சினிமாவில் என்னைப் பாதித்த பாத்திரங்கள் பல. இப்படி என்னை பாதித்து நீண்ட நாட்களுக்கு என் நினைவை விட்டு அகல மறுத்த ஒருவன்தான் Forest gump.அவன் நம் எல்லோரையும் போல் ஒரு சாமானியன். ஆம் போலியோவால் பாதிக்கப் பட்டக் கால்களைக் கொண்ட IQ குறைந்தவனாக பாடசாலை அதிபரால் அடையாளப்படுத்தப்படும் அவனிடம் "போறேஸ்ட் நீயும் மற்ற சிறுவர்களைப் போல சாதாரணமானவன்" என்றுதான் அவன் தாய் சொல்கிறாள். அப்படி சாதாரணமானவன் எனச் சொல்லப்படுபவனின் அசாதரணமான வாழ்க்கைத் தொகுப்பே Forest gump.


பேருந்து நிறுத்தமொன்றின் பெஞ்சில் அமர்ந்திருக்கும் Forest gump அங்கிருக்கும் பெண்மணியிடம் தன் கதையை பால்யக்காலத்தில் இருந்து சொல்லத் துவங்குகிறான். அவன் கதையை கேட்கும் நபர்கள் மாறிக் கொண்டேயிருக்கின்றனர். சிலர் அசுவாரசியமாய்,அல்லது நம்பிக்கையின்றி கேட்டப் போதிலும் தனது பால்யம்,சிறு வயதிலிருந்து நேசிக்கும் காதலி ஜெனி,வியட்நாமில் ராணுவத்தில் தன்னோடு இணைந்திருந்த நீக்ரோ நண்பன், தன் வாழ்வில் தான் முகங் கொடுத்த வெற்றித் தோல்விகள், என அனைத்தையும் மீள அசைபோட்டு பார்க்கும் மகிழ்ச்சியில் கதை தொடர்கிறது.


புறக்கணிப்புகள் நிறைந்த அவன் வாழ்வில் தேவதையாக வந்து சேர்பவள் ஜெனி. அவன் கால்கள் குணமானதில் கூட அவள் பங்கிருப்பதாய் கருதுகிறான். அவள் மேல் அளவு கடந்த பிரியத்தை வளர்த்துக் கொள்கிறான். தன் தந்தையால் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் ஜெனி அங்கிருந்து விடுப்பட்டு வெளியேற நினைக்கிறாள்.


காலங்கள் உருண்டோட தன் அபார ஓட்டத் திறமையால் உள்ளூர் ரக்பி அணியில் இடம் பிடிக்கும் Forest gump பின் இராணுவத்தில் சேர்ந்து வியட்நாமிய போரில் பங்கேற்கிறான். அங்கே ராணுவத்தில் தன்னோடு பணியாற்றும் பபா என்ற கறுப்பின வீரனின் கனவான மீன்பிடி தொழிலில் தன்னையும் இணைத்துக் கொள்வதாய் சொல்கிறான்.
எதிர்பாராமல்
போரில் பபா இறக்கும் அதேவேளை இரண்டு கால்களை இழந்ததால் சாக விரும்பும் தன் தலைமை அதிகாரி ஒருவர் உட்பட மிகுதி அனைவரையும் காப்பாற்றும் Forest விருதளித்து கௌரவிக்கப் படுகிறான்.


பின்னாளில் மிகச் சிறந்த பிங் பாங் வீரனாக மாறும் Forest அதன் மூலம் பெற்ற பணத்தொகையைக் கொண்டு பபாவின் கனவான மீன்பிடி தொழிலில் இறங்குகிறான். ஆரம்பத்தில் தன்னைக் காப்பாற்றியதற்காய் வெறுக்கும் அவனது தலைமை அதிகாரி டேன் பின் அவனுடன் இணைந்து மீன்பிடித்துறையில் கிடைக்கும் பணத்தை Apple Computer இல் முதலிடுகிறான். இதன் மூலம் கிடைக்கும் பெரும் பணத்தில் அரைவாசியை பபாவின் குடும்பத்திற்கு வழங்கி அவர்களை திக்கு முக்காடச் செய்கிறான் Forest.


இதற்கிடையில் தன் தந்தையை விட்டு தூரமாய் போகும் ஜெனி கட்டுப் பாடற்ற ஹிப்பிக் கலாச்சாரத்தில் மூழ்கி இலக்கில்லாமல் வாழ்கிறாள். விபச்சாரம் அவளது தொழிலாகிறது. நீண்ட காலத்திற்கு பின் இருவரும் சந்திக்கின்றனர். அவளிடம் தன் காதலை சொல்லும் Forest இடம் மறுக்கும் ஜெனி அன்றிரவு ஆறுதல் பரிசாக செக்ஸ் மட்டும் வைத்துக் கொள்கிறாள். காலையில் அவனிடம் சொல்லாமலே கிளம்பிப் போகிறாள். அதன் பின் காரணமில்லாமலேயே நாட்டைச் சுற்றி ஓடும் Forest அதன் மூலம் ஒரு கவனிப்பை பெறுகிறான். அவனும் ஜெனியும் மீள வாழ்வில் சந்தித்தார்களா? இருவரும் இணைந்தார்களா? என்பதை மனதைப் பிசையும் வண்ணம் சொன்னப் படம்தான் Forest gump.


ம்ம் நான் எழுத ரொம்ப சிரமப்பட்ட பதிவு இதுதான். ஏதோ ஆசையில் ஆரம்பித்து விட்டு வார்த்தைகளை சிக்கனப் படுத்தி எழுத ரொம்ப சிரமப்பட்டேன். யாரேனும் படத்தை பற்றி எழுதி இருக்கிறார்களா எனத் தேடித் பார்த்தேன். ம்ஹ்ம் Hollywood bala, ஜாக்கி சேகர், கேபிள் சங்கர் போன்ற பெருந் தலைகளே தொடல. தேவையான்னு கேட்டுக்கிட்டேன்.
நான் நினைத்ததை விட பதிவு கொஞ்சம் நீண்டு விட்டது. படத்தின் கதையை இங்கே சொல்லியிருக்கிறேன். படத்தில் நான் ரசித்த சில சுவாரசியங்கள் அடுத்த பாகமாக எழுதுகிறேன். சிரமம் பாராமல் வந்து வாசித்து ஆதரவு தாருங்கள் .

15 கருத்துகள்:

சென்ஷி சொன்னது…

நல்லா எழுதியிருக்கீங்க தல... ரொம்பப் பிடிச்ச படம் இது.. எழுதணும்னு ஆசைப்பட்டு பட்டு விடுபட்டுக்கிட்டு இருக்குது :)

சென்ஷி சொன்னது…

/சிரமம் பாராமல் வந்து வாசித்து ஆதரவு தாருங்கள் .//

:)

நிச்சயமாய்...

தர்ஷன் சொன்னது…

நன்றி சென்ஷி
உங்கள் எழுத்துக்களும் நீங்கள் வேறு பதிவுகளில் இடும் பின்னூட்டங்களும் படிக்க சுவாரசியமானவை.
நீங்களும் எழுதுங்கள்
இந்தப் படத்தை பற்றி பதிவுகள் குறைவு

butterfly Surya சொன்னது…

சூப்பர் படம். வெகு நாட்களாக எழுத வேண்டும் என்று இருந்தேன். அருமையான பகிர்விற்கு நன்றி.

தர்ஷன் சொன்னது…

நன்றி butterfly சூர்யா
ஹாலிவுட் படங்களை அடிக்கடி அலசும் உங்களின் பாராட்டு ரொம்பவே சந்தோசம் தருகிறது.

Karthikeyan G சொன்னது…

torrent download போட்டு விட்டாச்சு.. பார்த்திருவோம்.. :-)

பெயரில்லா சொன்னது…

i am unable to read your article any problem with font? how to download it? pl explain

Regards
Ravi

அஸ்பர் சொன்னது…

ஒரு சிலவர்கள் மட்டுமே இப்படியான ஹாலிவுட் படங்களை பார்க்கிறார்கள்.அறிந்திருக்குறார்கள். ஹாலிவுட் படம் என்றால் அடிதடி அல்லது Graphics என்று நினைக்கும் மக்களும் இருக்கிறார்கள். இப்படியான பதிவுகள் சிறந்த சினிமாவை மக்கள் அறிந்து கொள்ள உதவும் என்று நினைக்கிறேன்.

இப்ப இந்தப்படத்தை பார்க்க முடியாது bcz semester exam

Ananya Mahadevan சொன்னது…

இந்தப்படம் என்னோட all time favourite படமும் கூட. நான் பார்த்து அழுத ஒரே ஆங்கிலப்படம். இந்த படத்தின் ஒரு முக்கியமான அம்சம் - அமெரிக்க சரித்திரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள் இதில் உள்ளடக்கப்பட்டு இருக்கும். Apple Computers, Elvis Presley,Ping pong days-இப்படி. மீண்டும் இந்த படம் பார்த்த effect கொடுத்ததற்கு நன்றிகள் பல.

தர்ஷன் சொன்னது…

பாருங்கள் கார்த்திகேயன் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்

sorry ரவி எண்ணப் பிரச்சினைன்னு புரியல்லையே

தர்ஷன் சொன்னது…

//அஸ்பர் said...
இப்ப இந்தப்படத்தை பார்க்க முடியாது bcz semester exam//

ம்ம் வாங்க அஸ்பர் ஒன்னும் அவசரமில்ல எக்ஸாம் முடிந்து ஆறுதலா பாருங்க ரொம்பப் பழையப் படம் 94 இல் வந்தது

தர்ஷன் சொன்னது…

//அநன்யா மகாதேவன் said...
இந்தப்படம் என்னோட all time favourite படமும் கூட. நான் பார்த்து அழுத ஒரே ஆங்கிலப்படம்.//

நன்றி அனன்யா மேடம்
வில் ஸ்மித் நடித்த The pursuit of Happyness பார்த்திருக்கிறீர்களா

வால்பையன் சொன்னது…

இவரோட “த டெர்மினல்” எனக்கு ரொம்ப பிடிக்கும் தல!
இந்த படம் இன்னும் பார்க்கல!

தர்ஷன் சொன்னது…

ரொம்ப நன்றி வால்
உங்கள் வருகை ரொம்பவே உற்சாகம் அளிக்கிறது
“த டெர்மினல்” நான் பார்த்ததில்லை

புலவன் புலிகேசி சொன்னது…

பட்ம் இன்னும் பாக்கல..நிச்சயம் பாக்கனும்னு தோனுது..

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails