செவ்வாய், 22 டிசம்பர், 2009

இரண்டு சினிமாக்களும் ஒரு ட்ரைலரும்


ரெண்டு படங்கள் பார்த்தேன். ஒரு படம் இப்படி எல்லாம்தான் இருக்கும் இதுதான் நடக்கும் என்று நன்கு தெரிந்து பதிவர்களின் விமர்சனம் எல்லாம் படித்த பின்னும் போய் பார்த்தது சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டதற்கு ஒப்பானது. அந்தப் படம் பற்றிய விமர்சனங்கள் அதிகம் நீங்கள் படித்திருக்கக் கூடிய வாய்ப்பிருப்பதால் அதைப் பற்றி ஏதும் சொல்லப் போவதில்லை. என்ன இருந்தாலும் படத்தின் வெற்றி உறுதி. நான் போனது காலை நேரக்காட்சிக்கு அதுவும் நேற்று (கிட்டத் தட்ட படம் வெளிவந்து மூன்று நாட்கள் கடந்த நிலையில்) யப்பப்பா என்னக் கூட்டம் படம் முடிந்து வெளியே வருகையில் அதற்கு சற்றும் குறையாத கூட்டம் அடுத்தக் காட்சிக்கு. முதல் காட்சி முடிந்து போகும் ஒருவர் அப்பிடியே போய் அந்த க்யூவிலும் நிற்கத் தொடங்கினார். பிரபு நின்றிருந்தால் சொல்லியிருப்பார். (என்னா கொடுமை சரவணன் இதெல்லாம்?)அடுத்த படம் நம்ம ஊரில் தியேட்டரில் எல்லாம் போடவில்லை. இங்கு நான் மேலே சொன்ன டைப் படங்கள்தான் போடுவார்கள். ஆக மனசாட்சியை எல்லாம் தூக்கி தூரமாய் வைத்து விட்டு குறுந்தகட்டில்தான் பார்த்தேன். அந்தப் படம் ரேணிகுண்டா. படத்தை பற்றிய விமர்சனங்கள் எல்லாம் படித்து விட்டு ஆர்வமாய் பார்த்தால் கொஞ்சம் ஏமாற்றமாய் போய்விட்டது. படம் அத்தனை பெரிதாய் என்னைக் கவரவில்லை.


பருத்திவீரன்,சுப்ரமணியபுரம் வெற்றிக்குப் பின் யதார்த்தமாய் படம் பண்ணுகிறோம் என்ற பெயரில் வன்முறையை பிரதானமாய் கொண்டப் படங்களின் வருகை அதிகரித்து விட்டது. இப்போது கூட மேற்சொன்ன படங்களின் வெற்றிக்கு காரணம் படத்திலிருந்த அழகியல் அம்சமன்றி நம் மக்களின் மனதிலுள்ள வன்முறைக்கு ஆதரவான வக்கிர மனோபாவமா என்ற சந்தேகம் கூட எட்டிப் பார்த்தது.

விஜய்,அஜித் வகையறாக்களின் மசாலா டெம்ப்ளேட் படங்களை விமர்சிக்கும் நாம் அழுக்கான உடையணிந்த ரௌடிகள், அவர்களது வன்முறையான வாழ்க்கை,காதல், போராட்டம் ,இறுதியில் ஒரு சோக முடிவு என வரும் படங்களை விமர்சிக்க மறுத்து விடுகிறோம். அமீரின் யோகி இந்த வகையில் சுட்டக் கதையாக இருந்தாலும் புதிதாக ஒரு விடயத்தை நமக்கு சொன்னது எனலாம். ரேணிகுண்டாவில் விபச்சார அக்கா பாத்திரம் தவிர மிச்சம் எல்லாமே ஏலவே பல முறைப் பார்த்தது.

தென்தமிழகம் சார் ரௌடிக்களின் வாழ்க்கை முறையே பெரும்பாலான படங்களின் காலமாய் உள்ளது. ஆக இதுவும் C center பார்வையாளர்களைக் குறி வைத்த ஒரு வியாபார உத்தியாகவே கருத் வேண்டியுள்ளது. வெவ்வேறான மொழி,பண்பாடு,பொருளாதார வேறுபாடுகளைக் கொண்ட அத்தா பெரிய தமிழகத்தில் படம் பண்ண வேறு களங்களே கிடைக்கவில்லையா?
அதிலும் மத்தியத் தர வர்க்கத்தைப் பற்றிய படம் என்றால் அது பெரும்பாலும் காதல் படங்களாகவே இருக்கும். ஏன் அவர்களுக்கு வேறு பிரச்சினைகளே இல்லையா? ம்ம் புரியவில்லை.


ஆனால் இந்நிலை மாறும் என்ற நம்பிக்கை ஒரு படத்தின் டிரைலரைப் பார்த்தப் போது ஏற்பட்டது. அது செல்வராகவனின் "ஆயிரத்தில் ஒருவன்". தமிழில் வெளியாகும் முதல் fantasy movie இப்படிச் சொல்லலாமா. நம் நடிகர்களில் பெரும்பாலானவர்கள் Hollywood fantasy movieக்களில் super hero செய்வதை நம் சமூகப் படங்களிலேயே செய்வார்கள். செல்வா எனக்கு மிகவும் பிடித்த ஒரு இயக்குனர். ரொம்பவும் பொறுமையை சோதிக்காமல் அதேவேளை தரமும் கெடாமல் கலை,கமர்சியல் என இரண்டுக்கும் இடையிலான மெல்லிய கோட்டில் தடம் புரளாமல் தன படங்களைத் தருபவர். ஆக அதிகம் எதிர்பார்க்கிறேன் பொங்கலுக்கு ஆயிரத்தில் ஒருவனை
படத்தின் ட்ரைலரை இங்கே பாருங்களேன்

4 கருத்துகள்:

சங்கர் சொன்னது…

//முதல் காட்சி முடிந்து போகும் ஒருவர் அப்பிடியே போய் அந்த க்யூவிலும் நிற்கத் தொடங்கினார். //

ஏங்க, இப்படி ஒருத்தர பார்த்துட்டு, மனநல மருத்துவமனைக்கு தகவல் சொல்லாமல் வந்துட்டீங்களா?

தர்ஷன் சொன்னது…

நன்றி சங்கர்
வரவுக்கும் பின்னூட்டத்துக்கும்

பெயரில்லா சொன்னது…

Aayirathil Oruvan Trailer itself terrible.......
I meant the way they pictured.

ROBOT சொன்னது…

//அதிகம் எதிர்பார்க்கிறேன் பொங்கலுக்கு ஆயிரத்தில் ஒருவனை//

நானும் தான்.இந்த மாதிரி ஒரு சில முயற்சிகளால் தான் தமிழ் திரைத்துறையின் பெருமை இன்னும் நிலைத்து இருக்கிறது. trailor இன்னும் ஆவலை அதிகரித்துள்ளது .

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails