திங்கள், 28 டிசம்பர், 2009

சபிக்கப்பட்ட தேவதை


சபிக்கப்பட்டிருப்பேன் போலும்
போன ஜென்மத்தில்
தனிமை தவிர்க்க
காமம் தணிக்க
கனவுகள் வளர்க்க
ஒரு காதல் இல்லாமல் போகக் கடவதென

உன் விழிகளின் ஸ்பரிசத்தால்
சாபவிமோசனம் கிட்டுமென
நம்பிய போதுதான் தெரிந்தது
நீயும் இதயம்
கல்லாய் போக
சபிக்கப்பட்டிருக்கிறாய் என

10 கருத்துகள்:

Unknown சொன்னது…

நன்றாக இருந்தது.உங்கள் மாணவர்கள் உங்கள் வலைபூகலை படிக்கிரர்களா ? word verification --என்ன பண்றதுன்னு தெரியல.. நீங்க டீசெராக இருப்பதால் நன்றாக புரியும் படி சொல்லுங்க.

PPattian சொன்னது…

படத்துக்கேத்த கவிதை.. கவிதைக்கேத்த படம் .. நல்லாருக்கு.

தர்ஷன் சொன்னது…

நன்றி கார்த்திக்
நன்றி புட்டியன் தொடர்ச்சியான வருகைக்கு

Karthikeyan G சொன்னது…

தர்ஷன், உண்மையை சொல்லவேண்டுமெனில் இந்த கவிதை படு பயங்கர மொக்கையாய் இருக்கு.

உங்கள் சில நல்ல சமூக கட்டுரைகளை படித்துவிட்டு இந்த கவிதையை படிப்பதால் எனக்கு இதை சொல்ல தோன்றியது.

தர்ஷன் சொன்னது…

நன்றி கார்த்திகேயன்
காதல் போன்ற மொக்கையான விடயங்களைப் பற்றி எழுதினால் மொக்கையாய்த்தான் வரும். நல்லா இருக்கு என்கிற வழமையான டெம்ப்ளேட் பின்னூட்டம் அல்லாமல் இப்படி சொன்னதில் மிகுந்த சந்தோசம். இனி கொஞ்சம் கவிதை எழுதுவதை குறைப்போம்
மீண்டும் நன்றி

cherankrish சொன்னது…

//தர்ஷன், உண்மையை சொல்லவேண்டுமெனில் இந்த கவிதை படு பயங்கர மொக்கையாய் இருக்கு.

என்ன இருக்கறது இந்தக்கவிதையில் மொக்கையாக?


நல்ல கவிதை.எடுத்துக்கொண்ட விஷயத்தை விட அதைச்சொல்லிய விதத்திற்கு பாராட்டுக்கள்.

தர்ஷன் சொன்னது…

இல்லை சேரன் கிரீஸ்
பதிவுலகைப் பொறுத்தவரை புனைவுகள் பிறிதொரு தளத்திற்கு சென்றிருக்கின்றன. ஆக நம்ம வீரகேசரியில் கவிதைத்துளிகள் என்ற பெயரில் வரும் அமெச்சூர் தனமான கவிதைகளை ஒத்த இதை அவரது ரசனையின் அளவுகோலின்படி மொக்கை என்று சொல்லி இருக்கிறார்.
உங்கள் முதல் வரவு நன்றி சேரன் கிரீஸ் தொடர்ந்தும் தாருங்கள் உங்கள் ஆதரவை

Karthikeyan G சொன்னது…

என் அதிகபிரசங்கிதனத்தை பொறுத்துக் கொண்டமைக்கு உங்களுக்கு நன்றிகள் பல..

தர்ஷன் சொன்னது…

//என் அதிகபிரசங்கிதனத்தை பொறுத்துக் கொண்டமைக்கு உங்களுக்கு நன்றிகள் பல..//

அய்யய்யோ நான் அப்படி ஒன்றும் நினைக்கவில்லை
தயங்காமல் உங்கள் விமர்சனங்களை சொல்லுங்கள் கார்த்திகேயன்

முல்லை அமுதன் சொன்னது…

nallaayirukku.
mullaiamuthan.
http://kaatruveli-ithazh.blogspot.com/

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails