இசைப்புயலின்
பிறந்தநாளில் “ஏக் தீவானா தா”
பாடல்களில் மூழ்கியிருந்தேன். பாடல் பற்றிய கருத்துக்களை
நண்பர்களோடு ஃபேஸ்புக்கில் ஷேர் பண்ணலாம் என எழுதியது நீண்டு விட்டதால் பதிவாக .
“ஹோஸன்னா”
Leon D'Souza & Suzanne பாடியிருக்கிறார்கள்.
விஜய் ப்ரகாஷை விடவும் ஒரு
மென்மையை பாடல் பூராவும் குழைத்து விட்டிருக்கிறார்கள்.
காது வழியே தேன் பருகும்
உணர்வு. மொத்தத்தில் தமிழை விட பெட்டர்.
”ஷர்மிந்தா
ஹூன்” மன்னிப்பாயாவின் தமிழ் வடிவம், ஹிந்தி
வார்த்தைகள் இசையோடு பொருந்திப் போக
மறுப்பது ஹிந்தி தெரியாத எனக்கே
புரிகிறது. அதையும் விட தமிழ்
மன்னிப்பாயாவின் ஜீவனான ஷ்ரேயா கோஷல்
இல்லாதது பெரிய குறை. இசைப்புயலோடு
இணைந்திருப்பவர் மதுஸ்ரீ.
மலையாள ஆரோமலே ஹிந்தியில் உருமாறியிருக்கிறது. விடிவியில் இந்த பாடலை கேட்ட போது இருந்த பிரமிப்பு நிச்சயமாக இல்லை.
”தோஸ்த் ஹை ஹம் தோ” கண்ணில் கண்ணை ஒட்டிக் கொண்டே பாடலின் ஹிந்தி வடிவம். மிக்ஸிங்கில் சில மாற்றங்களை செய்திருக்கிறார்கள். ஒரு காதலனின் போராட்டத்தின் பதட்டம் தடதடக்கும் ரயிலின் பக்கத்தில் நிற்கும் நம்மையும் தொற்றிக் கொள்வதான அந்த பரபர உணர்வை ஹிந்திப் பாடல் தரவில்லை.
மலையாள ஆரோமலே ஹிந்தியில் உருமாறியிருக்கிறது. விடிவியில் இந்த பாடலை கேட்ட போது இருந்த பிரமிப்பு நிச்சயமாக இல்லை.
”தோஸ்த் ஹை ஹம் தோ” கண்ணில் கண்ணை ஒட்டிக் கொண்டே பாடலின் ஹிந்தி வடிவம். மிக்ஸிங்கில் சில மாற்றங்களை செய்திருக்கிறார்கள். ஒரு காதலனின் போராட்டத்தின் பதட்டம் தடதடக்கும் ரயிலின் பக்கத்தில் நிற்கும் நம்மையும் தொற்றிக் கொள்வதான அந்த பரபர உணர்வை ஹிந்திப் பாடல் தரவில்லை.
”க்யா ஹை மொஹாபத்”
தமிழில் இல்லாத பாடல் . ஹிந்தி ரசிகர்களுக்கான இசை. எளிமையான இசை போலத் தோன்றினாலும்
இசைப்புயலின் குரலின் வசீகரம் பாடலுக்கு ஒரு தனி அந்தஸ்தை தருகிறது. சொல்லி ஹிட் அடிக்கப்
போகும் ஒரு பாடல்.
பதிவில் திருப்தியுறாதவர்களுக்காக எமியின் சிறப்பு உம்மா படம்
”பூலோன் ஜைஸி”
ஓமணப் பெண்ணேவின் இந்தி வடிவம். இசையை விட்டு ஓடும் வரிகளை வலுக்கட்டாயமாக சிறை பிடித்திருக்கிறார்கள்.
இது ஹிந்தி ரசிகர்களுக்கான பாடல் இல்லை. அங்கு ஹிட்டடிப்பது கடினம்.
”சுன்லோ சரா” குரலில்
தேன் தடவி பாடுபவர் ஷ்ரேயா கோஷல். இசையிலும் ஆங்காங்கே ரசிக்கச் செய்யும் சில மாற்றங்கள்.
“சோஹ்ரா ஜபின்”
விண்ணைத் தாண்டி வருவாயாவின் ஹிந்தி வடிவம்.இசைப்புயலுக்கு பதில் ஜவேட் அலி பாடியிருக்கிறார்.
சென்னையின் மொசார்ட் அளவுக்கு இல்லை.
மொத்தத்தில் தமிழளவிற்கு ஹிட் அடிக்க வாய்ப்பில்லாத ரஹ்மானின் சராசரியான இசைத் தொகுப்புகளில் ஒன்று. இரண்டாம் முறை செய்யும் போது மெருகேறும் என்பதெல்லாம் சும்மா. எப்போதும் முதலில் செய்வதே பெஸ்ட் என்பதை நிரூபித்திருக்கிறது.
மொத்தத்தில் தமிழளவிற்கு ஹிட் அடிக்க வாய்ப்பில்லாத ரஹ்மானின் சராசரியான இசைத் தொகுப்புகளில் ஒன்று. இரண்டாம் முறை செய்யும் போது மெருகேறும் என்பதெல்லாம் சும்மா. எப்போதும் முதலில் செய்வதே பெஸ்ட் என்பதை நிரூபித்திருக்கிறது.
10 கருத்துகள்:
ரஹ்மானின் வளர்ச்சின் வேகத்திற்கு எனது இசை ரசனை வளரவில்லை; 2000 க்கு பின்னர் ரகுமானது இசையை எனது ரசனை பெரும்பாலும் புரிந்துகொண்டதில்லை!!! பரவாயில்லை, முதல் 8 ஆண்டுகளில் ரகுமான் கொடுத்த அத்தனை மெலடிகளும் மீண்டும் மீண்டும் கேட்டு சிலாகிப்பதற்கு எனக்கு போதும்!!! விண்ணைத்தாண்டி வருவாயா பாடல்களின் தரம் மிகச்சிறப்பானது என்பது எனக்கு நன்றாகவே புரிந்தது; ஆனாலும் ஒரு 'எவனோ ஒருவன் வாசிக்கிறான்' போலவோ, 'எங்கே எனது கவிதை' போலவோ மனதில் ஒட்டவில்லை; அப்புறம் ஹிந்தி பாடல்கள் கேட்க்குமளவிற்கு மீ இன்னும் வளரவில்லை :p
இசைப்புயலுக்கு (எனக்கு அவரது புயல் இசையைவிட அவரது மென்மையான இசைதான் அதிகம் பிடிக்கும்) எனது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!!!!
:)
நானும் திருப்பி திருப்பி கேக்கிறன். இன்னும் வடிவா கேட்டுட்டு வாறன்!!
அவரின் இசை ரெம்ப பிடித்து இருந்தாலும் இங்கு இருப்பவை தெரியாத விசயங்கள்..))
அவருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் )
நானும் நேற்று பல முறை கேட்டேன்...... மிகவும் அருமை...
நீங்கள் உட்பட பலர் கூறுவதால் இதோ இப்போதுதான் முதன்முதல் கேட்கப்போகின்றேன்...
உங்கள் பதிவில் எனக்கு பூரண உடன்பாடு இல்லை. ஹிந்தி பாட்டுக்களும் சுப்பரா இருக்கு. சிலபாட்டை ஹிந்தி ஸ்டைலிற்கேற்ப மாத்திருக்காங்க. உதாரணமாக அன்பில் அவனில் வரும் அந்த கல்யாணவீட்டு ரியுன்!!
வணக்கம் நண்பா,
நல்லா இருக்கிறீங்களா?
ரகுமானின் பாடல் ஹிந்தியில் சொதப்பி விட்டது என்பதை உங்கள் பதிவினூடாகத் தான் அறிந்தேன். பார்ப்போம், அடுத்தடுத்த படங்களில் நல்லா பண்ணுவார் என நினைக்கிறேன்.
அருமை நண்பரே
http://ambuli3d.blogspot.com
நமக்கு ஏற்கனவே கேட்டுடதால கொஞ்சம் வித்யசகமாக உள்ளது.
ஹிந்தியில் சில மாறுதல்கள் இருந்தாலும், பாடல்கள் அனைத்தும் சூப்பர்.
கருத்துரையிடுக