செவ்வாய், 17 மார்ச், 2009

தமிழகச் சொந்தங்களுக்கு மலையகத்திலிருந்து ஓர் விண்ணப்பம்



பெருமையாக இருக்கிறது
நாங்கள் செய்ய வேண்டியதை எங்களால் செய்ய முடியாததை நீங்கள் செய்யும் போது
வெட்கத்தோடு ஒத்துக் கொள்கிறோம் நாங்கள் கோழைகள்

நமக்கு நாமே வைத்துக் கொள்ளும் ஆப்பு என்று சர்வ நிச்சயமாய் தெரிந்தும் அவசரக் காலச் சட்டத்துக்கு ஆதரவாய் கையுயர்த்தியவர்களை தலைவர்களை கொண்டவர்களில் நானும் ஒருவன்.

95 சதவீதம் எழுத்தறிவுள்ள தேசத்தில் தற்குறிகள் அதிகம் எனக் கூறப்படும் பிரிவினரில் நானும் ஒருவன்.

எமக்கான உரிமைகள் என்னவென்றே அறியாமல் அற்ப சலுகைகளில் திருப்தியுறும் கையாலகாதவர்களில் நானும் ஒருவன்.

ஏதோ இப்போதுதான் எம்மை இத்தனைக் காலமாய் ஏய்த்த தலைமைகளை நிராகரிக்கும் துணிவே தட்டு தடுமாறி எட்டிப் பார்த்திருக்கிறது

தமிழகத்தில் இது தேர்தல் காலம் கூட்டணி அமைக்கும் முயற்சியில் கட்சிகள் மும்முரமாய் உள்ளன. கூட்டணிகள் அமைந்த பின் வாக்குறுதிகளும் இலவசங்களும் அள்ளி வீசப்படலாம்.

ஒன்று செய்வீர்களா
வெளியில் மட்டும் தீரமாய் திராவிடம் பேசி தமிழன் கொல்லப்படும் போது மௌனமாவோரையும் அவரோடு கூட்டுச் சேரும் மதச் சார்பின்மையும் தேசியமும் பேசும் பார்ப்பனிய கட்சிகளையும் நிராகரித்து தேசம் மாறினாலும் தமிழுணர்வால் நாம் ஒன்றுப் பட்டவர்கள் என்பதை உலகுக்கு காட்டுவீர்களா?


என்ன செய்வது வலிமை குறைந்த சின்னத் தம்பிகள் மூத்த சகோதரனிடம்தானே உதவிக்கு இறைஞ்ச முடியும்.

5 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

//என்ன செய்வது வலிமை குறைந்த சின்னத் தம்பிகள் மூத்த சகோதரனிடம்தானே உதவிக்கு இறைஞ்ச முடியும். //

:‍(((

உங்களுக்கு இன்னும் நிதர்சணம் புரியவில்லை நண்பா.

இந்தியாவிற்கு என்று தெளிவான வெளியுறவுக் கொள்கை கிடையாது. எந்த அண்டை நாட்டுடனும் அது தீர்மானமான முடிவுகளைக் கொண்டது கிடையாது.

நடக்கப்போவது பாராளுமன்றத் தேர்தல் என்றாலும், எந்த தேசியக் கட்சியும் "இதுதான் எங்களின் வெளியுறவுக் கொள்கை, இந்த ..இந்த.. நாட்டின் பிரச்சனைகளை இப்படித்தான் நாங்கள் அனுகப் போகிறோம்" என்று தெளிவாகச் சொல்லி யாரும் ஒட்டுக் கேட்கப்போவது இல்லை.

மாநிலக் கட்சிகளுக்கு வெளியுறவுக் கொள்கைகளை வடிவமைப்பதில் அதன் பங்கு இன்னும் புரிந்தமாதிரி தெரியவில்லை. தமிழகம் இலங்கைக்கு அருகே இருக்கும் ஒரு மாநிலம். இலங்கையுடனான‌ இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை முடிவுகளில் தமிழகத்தின் பங்கு அதிகமாக இருக்க வேண்டும். ஆனால் , தமிழக அரசியல் தலைவர்கள் வார்டு கவுன்சிலர் தேர்தலில் ஆரம்பித்து பாரளுமன்ற தேர்தல் வரை அரிசி,உப்பு, இலவச பொருட்களை அறிக்கைகளாக விட்டே ஓட்டுக் கேட்பார்கள்.

சோற்றால் அடித்த பிண்டங்களான மக்களும் "முண்டமே இது பாரளுமன்றத்தேர்தல், அண்டை நாட்டில் பிரச்சனை பற்றி எரியும் போது, அதன் அருகில் வாழும் தமிழ்நாட்டினரான நமது நிலைப்பாடு என்ன? இலங்கையுடனான‌ இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை முடிவுகளில் நீ என்ன மாற்றம் வேண்டும் என்கிறாய்?" என்று கேட்கப்போவது இல்லை.

கச்சத்தீவில் முதல் தமிழக மீனவர்களின் பிரச்சனைகளுக்கே இவர்களிடம் தெளிவான பதில் இல்லை.

**
கருணாநிதியில் தொடங்கி திருமா வரை இலங்கையுடனான‌ இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளை முன்னிருத்தி தேர்தலை சந்திக்கப்போவது இல்லை. அவர்களின் கூட்டணியும் அதை நோக்கியது இல்லை.

எனவே தமிழகத்தின் வழியாக ஈழத்திற்கு ஏதேனும் தீர்வு வரும் என்று நம்பிக்கை கொள்ளவேண்டாம். அரசியல் கோசங்களுக்கு தமிழீழ உணர்வுகள் அறுவடை பயன்பட்டால் அதைப் பயன்படுத்துவார்கள். ஆக்கபூர்வமான எந்த முயற்சியும் கிடையாது.

திமுக- ‍காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்கூட ஒக்கனேக்கல் பிரச்சனையையே தீர்க்க முடியாது. ஈழம் வெகுதூரம்

**

பெயரில்லா சொன்னது…

ஈழப்போராட்டதின் தீவிர ஆதரவாளன் நான்.
உங்கள் கருத்துக்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.
பார்ப்பனியப் பிடியிலிருந்து தமிழ்நாட்டுக்கு என்று வரும் விடிவு?
மலையகத் தமிழ்த்தலைவர்கள் இன்றைய சூழ்நிலையில் சற்று அடக்கிவாசிப்பதை நான் குறை கூற மாட்டேன்.
தமிழ்நாட்டுத்தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை இல்லை என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

ராஜ நடராஜன் சொன்னது…

இப்படியொரு படம் போட்டுவிட்டு எங்களைப் பற்றி பெருமை கொள்வதில் என்னங்க பயன்?குரல் கொடுத்தும் மனம் மாறா இறுகிய இதயங்கள் நிறைய இருக்கின்றன.

kuma36 சொன்னது…

//பெருமையாக இருக்கிறது
நாங்கள் செய்ய வேண்டியதை எங்களால் செய்ய முடியாததை நீங்கள் செய்யும் போது
வெட்கத்தோடு ஒத்துக் கொள்கிறோம் நாங்கள் கோழைகள்//

//நமக்கு நாமே வைத்துக் கொள்ளும் ஆப்பு என்று சர்வ நிச்சயமாய் தெரிந்தும் அவசரக் காலச் சட்டத்துக்கு ஆதரவாய் கையுயர்த்தியவர்களை தலைவர்களை கொண்டவர்களில் நானும் ஒருவன்.//

என்னையையும் சேர்த்துக்கொள்ளுங்கள் தர்ஷன்.

We The People சொன்னது…

சாரிங்க! தவறான கோரிக்கை தவறான இடத்தில்! தமிழக மக்கள் பிரச்சனையை ஊறப்போட்ட மறந்துவிடுவார்கள் அல்லது அரசியலவாதிகள் எதையாவது செய்து மறைத்துவிடுவார்கள்! அதை தான் நம்ம அரசியல்வாதிகள் அருமையா உபயோகிப்பார்கள், அதனால் நீங்க நினைப்பது 100% நடக்காது! எங்களை நம்பாதீர்கள் என்று ... :(((((((((((

இங்கே என்ன நடந்தாலும் சப்பை கட்டு கட்டி என் தலைவன் நல்லவன், அவன் கட்சி சிறந்தது என்ற சார்ப்பு மாக்கள் (வழக்கமான் எழுத்துப்பிழை இல்லை), கூட்டணி பலமே இவையே தேர்தல் வெற்றியை முடிவு செய்யும்!

வருத்துடன்

நா ஜெயசங்கர்

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails