வியாழன், 10 டிசம்பர், 2009

இரயில் பயணங்களில்



தலைப்பு டி.ஆர் படப் பெயராக இருப்பதால் கரடியைக் கண்டவர்களைப போல ஓடி விட வேண்டாம்.

இது நம்ம கதை
நாம் என்னதான் நிகழ்காலத்தில் வாழ வேண்டுமென கூறிக் கொண்டிருந்தாலும் எதிர் காலத்தை பற்றி கனவு காண்பதிலும் இறந்த காலத்தை எண்ணிப் பார்ப்பதிலும் உள்ள சுகம் வேறெதிலும் இருப்பதாக தெரியவில்லை.

அதிலும் காதல் ஒருதலை, இருதலை ,முக்கோண அட கள்ளக் காதலாயிருந்தாலும் அந்தளவிற்கு மகிழ்ச்சி தரும் வேறெதுவும் இருப்பதாக தெரியவில்லை. நாம் Testosterone, oxytocin, என்பவற்றின் ஆக்கிரமிப்பில் கவலை மறந்திருக்கும் அந்த இனிமையான காலம்

அண்மையில் தனியார் வகுப்புக்கு Notes தயார் செய்ய பழைய A/L notes நோண்டிய போது ஒரு கொப்பியில் இருந்தது இந்த கவிதை(அப்பெல்லாம் இத அப்படிதான் சொன்னேன் இப்ப அது சரியான்னு நீங்க பார்த்து சொல்லுங்க )
இன்னமும் கொஞ்சம் இருந்தது இதற்கான வரவேற்பை பார்த்து அவற்றையும் மெல்ல பதிவிடலாம் என நினைக்கிறேன்.


அலாரம்
இன்றியே
அலறிப்
புடைத்து எழுந்தேன்

காலைக் கடன் தொடங்கி

அனைத்துமே வெகு அவசரமாய்

என் வீட்டு நிலைக் கண்ணாடிக்கோ

அன்று வேலைப் பளு அதிகம்

இன்று உன்னைப் பார்க்கப் போவதால்


அவசரமாகவே வந்துவிட்டேனோ

பார்க்கும் போதெல்லாம்

கடிகார முள் அதே இடத்தில்

அசையாமல்

காத்திருப்பும் சுகம்தான்

உனக்காக காத்திருப்பதால்


வலது தோளில் புத்தகப்பை
நிலத்தை அளக்கும் விழிகள்

எண்ணி எண்ணி அளவாய்

எடுத்து வைக்கும் அடிகள்

அன்னம் உன்னிடம்தான்

நடை பழகி இருக்கும்


நன்றாயிருப்பதாய் பொய்
சொன்னேன்
நீ நலம் விசாரிக்கும் போது

மலர்ந்த உன் முகம்

சிநேகமாய் வருடும் உன் புன்னகை

இசையாய் தாலாட்டும் உன் வார்த்தை

இன்னும் கொஞ்ச நேரம்
தொடரட்டுமே

உலகையே வென்ற கர்வம்
நான் பிடித்த ஆசனத்தில்

நீ அமர்ந்த போது

நிச்சயமாய் சொர்க்கம்
வெகு தொலைவிலில்லை

ரயிலோசை இரைச்சலாம்
யார் சொன்னது
எனக்கோ சங்கீதமாய்
இனிக்கிறது
உன் வார்த்தைகளுக்கு

பின்னணி இசைப்பதால்


உன் கைவிரல்களுக்கிடையில்
கசங்கிய கைக்குட்டையில்
கூட
சுருக்கங்கள் குறைவுதான்
உன் விழிவீச்சால் கசங்கிய

என் இதயத்தோடு ஒப்பிட்டால்

ஒவ்வோர் தரிப்பிலும்
என்
இதயமே நின்று போகிறது
உன்னோடு நானிருக்கும்

நொடிப்பொழுதுகள்

வேகமாய் கரைவதால்


நீ இறங்கப்போகும்
தரிப்பு
உனக்கும் வருத்தமா

உன் விழியில் விடை

தேடித் தோற்றேன்

எனக்கோ பெருங்கவலை

சந்தோஷமான நாளில் ஒன்று

சீக்கிரமாய் தீர்ந்ததால்


நீ கையசைத்து
விடைப்
பெற்றாய்
உன் தலை மறைந்த
அடுத்தக்
கணமே அவசரமாய்
பத்திரப் படுத்தினேன்

நீ ஆசனத்தில் போட்டமர்ந்த
காகிதத்தை

கட்டில் விரிப்பை நூறாவது
தடவையாகவும் சரிசெய்தேன்
இன்றைய நாளை
எண்ணிப்
புரண்டதில்
தூக்கம் கண்களிநின்று
தொலைதூரமாய் எங்கோ

ஆனாலும் படுத்திருந்தேன்

உன் நினைவுகளோடும்
கைகளுக்குள்
சிறைப்பட்ட
தலையணையோடும்

எட்டு வருடங்களுக்கு முன் எழுதியது. இதைப் பதிவிட முன் நண்பரொருவரிடம் காட்டினேன். அதைப் பார்த்து அவன் கேட்டான்.
"இப்போதெல்லாம் அந்த காலத்தை நினைக்க அபத்தமாய் இருக்குமில்லையா?"
அவனுக்கு சுஜாதாவின் வசனமொன்றைதான் பதிலாய் சொன்னேன்.
" VCR போல லைப்லயும் ஒரு ரீவைண்ட் பட்டன் இருந்தா நல்ல இருக்கும்ல"


7 கருத்துகள்:

Unknown சொன்னது…

//ரயிலோசை இரைச்சலாம்
யார் சொன்னது
எனக்கோ சங்கீதமாய் இனிக்கிறது //

ம்... விளங்குது...
உண்மையச் சொன்னால் நான் உப்பிடி எல்லாம் இருந்ததில்ல.. ஏனோ தெரியேல...

என்றாலும் காதல் என்பது சுகமான அனுபவம் தான்... அது தரும் இன்ப வலிகள் அருமை தான்....

Admin சொன்னது…

ஆஹா... காதல் மன்னன் தர்ஷன் வாழ்க...

அப்பவே காதலிக்க ஆரம்பித்துவிட்டின்களோ. யார் அந்த ராட்சசி.... லொள்ளு

Jay சொன்னது…

பிஞ்சிலயே பழுத்திட்டீங்களே தலை ;)

தர்ஷன் சொன்னது…

// கனககோபி said...
ம்... விளங்குது...
உண்மையச் சொன்னால் நான் உப்பிடி எல்லாம் இருந்ததில்ல.. ஏனோ தெரியேல...//

நானும் அப்படித்தான் கோபி
இதெல்லாம் ச்ச்சும்மா எப்பவோ வயசுக் கோளாறில் எழுதியது

//சந்ரு said...

ஆஹா... காதல் மன்னன் தர்ஷன் வாழ்க...

அப்பவே காதலிக்க ஆரம்பித்துவிட்டின்களோ. யார் அந்த ராட்சசி.... லொள்ளு//

ன்னா சந்துரு அண்ணா இதெல்லாம் ரொம்ப ஓவர்
நாமெல்லாம் இப்படி வெறுமனே கவிதை கிறுக்கி மட்டுமே வாழ்ந்தவங்க உங்கள் பட்டத்தை எதிர்காலத்தில் வாங்க முயல்கிறேன்


//Mayooresan said...

பிஞ்சிலயே பழுத்திட்டீங்களே தலை ;)//

நன்றி மயூரேசன் வரவுக்கும் பின்னூட்டத்துக்கும்
18 வயசு பிஞ்சு வயசா (2001 இல் என நினைக்கிறேன்.)


ஒருத்தர் காதல் மன்னன் என்கிறார் இன்னொருத்தர் தல என்கிறார் அஜித் ரசிகர்கள் கோபித்துக் கொள்ளா விட்டால் சரி

உங்கள் தோழி கிருத்திகா சொன்னது…

நான் பிடித்த ஆசனத்தில்
நீ அமர்ந்த போது
நிச்சயமாய் சொர்க்கம்
வெகு தொலைவிலில்லை//////////

appo standingalaye poningala....

supernga,....nalla muyarchi...abathamaga illai...ithellam malarum ninaivugal..pokkishama irukkum

தர்ஷன் சொன்னது…

நன்றி கிருத்திகா
தலைவரின் ரசிகையின் வரவுக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி

யாழினி சொன்னது…

வாவ் உங்கள் கவி வரிகள் உண்மையிலேயே அழகாக இருக்கு! :)

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails